நான் வாழை பயிரிடும் விவசாயி. வருடம் முழுக்க செலவு செய்து வாழை பயிர் செய்துவிட்டு, வருட முடிவில் அதன் விளைச்சலை பார்க்கும் முன், பல நேரங்களில் தண்ணீர் பிரச்சனையால் வாழையின் வளர்ச்சி பாதிப்பு அடைந்து, என்னுடைய உழைப்பும், பணமும் விரயமாகிவிடுகிறது. பல நேரங்களில் காற்றில் மரங்கள் சாய்ந்து, நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது. இதனால் வருமானம் குறைந்து கடன் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது. எனக்கு மற்றவர்களிடம் சென்று வேலைக்கு போக விருப்பமில்லை. அதனால சொந்தமாக மாதம் ஒரு பத்தாயிரம் ரூபாய், உள்ளூரிலேயே ஈட்டக்கூடிய வியாபாரம் ஒன்று ஆரம்பிக்கனும்னு தோணுச்சி. அந்த வியாபாரம் எந்த வகையிலும் பண நஷ்டத்தை கொண்டு வந்துவிடக்கூடாது, என்று யோசிக்கும் போது, எங்க ஊர்ல ஐந்துக்கும் மேற்பட்ட டீக்கடைகள் இருக்கு. ஆனா, ஒரு கரும்பு சாறு கடையோ அல்லது இளநீர் கடையோ இல்லை.
அதற்கு காரணம், இதுலாம் சீசன் வியாபாரம். கோடைக்காலத்துல மட்டும்தான் விற்பனை இருக்கும். மற்ற நேரத்துல வியாபாரம் முடங்கிரும்னு யாரும் இந்த கரும்புச்சாறு வியாபாரத்துல ஆர்வம் காட்டல. ஆனா , மக்களுக்கு கெடுதல் தரும் பெப்சி கோக்கை எல்லா சீஸன்லயும் விக்கிறாங்க. கரும்புச்சாறு எல்லா வயது மக்களுக்கும் நல்லது செய்யும் ஒரு அமிர்தம். அதுல இயற்கையாகவே கால்சியம் , பொட்டாசியம், மக்னீசியம் , அயன், மாங்கனீசு போன்ற அல்கலைன் பொருட்கள் அதிகம் இருக்கிறதால கேன்சரை தடுக்கும்னு சொல்றாங்க. பொட்டாசியம் அதிகம் இருக்கிறதால, வயிற்று செரிமான நோய்களை குணமாக்கும். சர்க்கரை நோய் இருப்பவங்க இதை குடிக்கலாம். சர்க்கரை நோயில டைப் 2 இருக்கிறவங்க மட்டும் டாக்டர்ட்ட கேட்டுட்டு குடிக்கணும். இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கும் வல்லமை கரும்பு சாறுக்கு உண்டு என்பதால் இதய நோயை கட்டுப்படுத்த உதவும். உடல் எடையை குறைக்கணும்னு நினைக்கிறவங்க நார்ச்சத்து அதிகம் உள்ள இந்த கரும்பு சாறை குடிக்கலாம். இவ்வளவு நன்மை கொடுக்கிற கரும்புச்சாறு ஒரு அமிர்தம்தானே. அடுத்து, நான் இந்த கரும்புச்சாறு வியாபாரம் நடத்தினா வரும் லாப நஷ்ட கணக்கை ஒரு மாதத்திற்கு என்று பார்க்காமல் வருஷத்திற்கு எவ்வளவு லாபம் வரும் என்று கணக்கு போட்டு பார்த்தேன். மழைக்காலத்தில் கூட ,மழை பெய்யும் நாட்கள் தவிர மற்ற நாட்கள் வியாபாரம் சுமாராவாது இருக்கும். வெயில் காலத்தில் வியாபாரம் இரு மடங்கு அல்லது 3 மடங்கு சூடு பிடிக்கவும் வாய்ப்பு இருக்கு என்பதை மனதில் கொண்டு, ஊரில் வேறு கரும்புச்சாறு கடை இல்லாததால தைரியமா இந்த வியாபாரம் செய்து பார்க்கலாம்னு முடிவு பண்ணினேன். வழக்கமா ரோட்டு ஓரங்களில் பார்க்கும் கரும்பு சாறு பிழியும் மெஷின்ல கஷ்டப்பட்டு பிழிவாங்க. அதுல ஈக்கள் அதிகம் மொய்க்கும். அப்புறம், சாறு பிழியும் போது கைகள்ல சாறு படும் . இது அவ்வளவு சுகாதாரமாக இருக்காது. கரும்புச்சாறு பிழியும் ஆளுக்கு உடல் வலிமை தேவை. அதனால கரண்ட்ல இயங்குற, ரொம்ப எளிதாக, சுகாதாரமான முறையில கரும்புச்சாறு பிழியும் மெஷின் சந்தையில இருக்கானு பார்த்தப்ப, எனக்கு ஆச்சர்யமா இருந்தது . நான் நினைக்கிற மெஷின்கள் சந்தையில ஏற்கனவே நிறைய இருக்கு. சென்னை போன்ற பெரிய நகரங்களில தியேட்டர் ஹாஸ்பிடல் கான்டீன் சூப்பர் மார்க்கெட் ஹாஸ்டெல் கான்டீன் பஸ் ஸ்டாண்ட் போன்ற இடங்கள்ல இந்த மாதிரியான சுகாதாரமான , எளிமையா இயங்கக்கூடிய மெஷின் பயன்படுத்தி கரும்புச்சாறு வியாபாரம் பண்றாங்க. அடுத்து மெஷினோட விலையை விசாரிச்சேன். விலை 40 ஆயிரத்திலேர்ந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் வரை, ஒவ்வொரு கம்பெனிக்கும் வித்தியாசப்பட்டு இருந்தது. இதுல எப்படி சரியான மெஷினை தேர்வு பண்றது. விலை குறைவா இருக்குதேன்னு, 40 ஆயிரம் ரூபா மெசினை பத்தி, அத பயன் படுத்தின கடைல கேட்டப்ப, அது சைனா மெஷின். ஒரு மாதம் கூட சரியா ஓடுறது இல்ல. சர்வீஸ் வாரன்டீனு ஒன்னும் கிடையாது என்பதை தெரிஞ்சிகிட்டேன். விலை கம்மினு வாங்கிட்டு, அப்புறம் சாறு எடுக்க முடிலனா, போட்ட முதல், எல்லாம் வேஸ்ட் ஆயிடும். அப்புறம், விலை கூடின மெஷின் பத்தி விசாரிச்சேன். அந்த மெஷின் எல்லாம், நல்ல உழைப்பதாகவும், ஆனா ஏதாச்சும் சின்ன பிரச்சனை வந்தா, சர்விஸ் உடனே கிடைப்பதில்லை அதனால வியாபாரம் ஒரு வாரம் வரைக்கும் பாதிக்குதுனும் தெரிஞ்சுகிட்டேன். இரண்டு மாத தேடலுக்கு பின்னாடி, கடந்த மே மாதம் இறுதியிலதான், இந்த சுக்கி , என்கிற கரும்பு சாறு பிழியும் மெஷின் அதே மாதிரியான உயர் விலை மெஷினை விட மிக குறைந்த விலையில, நல்ல தரத்தோட எனக்கு அறிமுகம் ஆச்சு. அந்த சுக்கி மெஷினோட விலை 75 ஆயிரம் ரூபாய். 2017 வருட கோடை சீசன் முடிஞ்சிட்டாலும், நான் ஏற்கனவே முடிவு பண்ணின படி, ஒரு வருட முடிவில் கிடைக்கும் லாபத்தை மனதில் கொண்டு கடைய திறந்தேன். சுக்கி கம்பெனி காரங்க ஒரு வருட இலவச வாரண்டீ கொடுக்கிறதால , ஒரு வருடம் வரைக்கும் என் பொருளுக்கு எந்த பங்கமும் இல்லை என்ற உறுதி கிடைச்சிட்டு. இப்ப, எங்க ஊர்ல ஒரு நாளைக்கு சராசரியா 45 ஜூஸ் என்று வியாபாரம் நடக்கு. முதல்ல கடை திறந்ததும் 10 முதல் 15 ஜூஸ் தான் விற்பனை ஆச்சுது. புதிதாக திறந்த கடை மக்களுக்கு அறிமுகமாக 20 நாட்கள் வரை ஆயிடுச்சி. ஆனா அப்புறம் கொஞ்ச கொஞ்சமா வியாபாரம் அதிகமாகி இப்ப தினமும் 40 முதல் 60 ஜூஸ் வரை வியாபாரம் நடக்கு. ஒரு மாதத்திற்க்கு 1350 ஜூஸ். மொத்த வருமானத்துல பாதிக்கு பாதி கரும்பு வாங்க, கரும்பு டவுன்லேர்ந்து கொண்டு வர செலவாயிடும். ஒரு ஜூஸ் 15 ரூபாய்க்கு விற்பனை பண்றேன். பாதி ஜூஸ் விலை லாபமா கிடக்குது. கரும்புக்கான செலவு போக மாதம் 10125 ரூபாய் வருமானம். இந்த சீசன் இல்லாத மாதத்துல, கடை வாடகை 1000 ரூபாய் போக 9000 ரூபாய் நிக்குது. இனி வரும் கோடை காலத்துல இதைவிட இரண்டு அல்லது இரண்டரை மடங்கு வியாபாரம் அதிகமாகும்னு நல்ல நம்பிக்கை எனக்கு இருக்கு. இந்த ஜனவரி 2018க்குள்ள மெஷினுக்கு போட்ட முதல் கைக்கு வந்துடும். அப்புறம், பிப்ரவரியிலேர்ந்து வரும் இரண்டு மடங்கு வருமானம் நல்ல லாபமாக இருக்கும். 2018 மே வரைக்கும் மெஷினுக்கு இலவச சர்விஸ் இருக்கிறதால, வியாபாரத்தை என்னால தடை இல்லாம நடத்த முடியும்னு நம்பிக்கை இருக்கு. குறைந்த முதலீடு செஞ்சு, சிறு சுய தொழில் செய்பவர்களுக்கு சுக்கி கம்பெனி மெஷின் ஒரு நல்ல வரப்பிரசாதமா அமைஞ்சிருக்கு. சுக்கி கம்பெனி மெஷின் எனக்கு நல்ல வருமானத்தை பெற உதவி செய்யறதால முழு திருப்தியோட இந்த வியாபாரத்தை செய்யறேன்.